ஞாயிறு, 7 மார்ச், 2010

வியாழன், 4 மார்ச், 2010

புலிகளும் நானும்


புலிகளின் மீதான எனது காதல் எப்போது துவங்கியது ? சரியாக சொன்னால் எனது பொறியாளர் பணியின் காரணமாக நான் தேக்கடிக்கு மாறுதல் செய்ய பட்டு பணியில் சேர்ந்த நாள்முதல் எனது இயற்கை ஆர்வமும் அதிகரித்தது
மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்த அழகிய இயற்கையின் குடி இருப்பு அது
அன்று இந்திய பிரதமர் இந்திரா காந்தி தன பாதுகாவலர்களால்
சுடப்பட்ட நாள் எங்கும் போக்குவரத்து இல்லை எவ்வித வாகனமும் ஓடவில்லை அன்று எனது பொறுப்பில் இருந்த பணியாளர்களுக்கு ஊதியம் மற்றும் சில நிலுவை தொகைகளை பெற எனது தலைமை அலுவலகம் வந்தேன் நான் பணம் கிடைத்தது அனால் இந்த நேரத்தில் பயணம் செய்வது பாதுகாப்பானது அல்ல என அனைவரும் சொன்னதால் இரவும் மறுநாளும் காத்திருந்தேன் சுழ்நிலையில் மாறுதல் எதுவும் இல்லை தொலைதொடர்பு இல்லை எப்படியும் இன்று இரவு திரும்ப வேண்டும் என நினைத்தேன் ஓட்டுனர் எவரும் வராத காரணத்தால் எனது அலுவலக் ஜீப் மட்டும் இருந்தது எனக்கு ஓட்டுனர் உரிமம் இருந்ததால் இரவு பனிரண்டு மணிக்கு ஜிப்பை ஒட்டி வந்தேன்
கூடலூர் சோதனை சாவடியை கடக்கும் போது இரவு மணி இரண்டு அங்கிருந்த காவலர் வாகன போக்குவரத்து இல்லாததால் மிருகங்கள் அதிகம் சாலையை கடக்கும் எனவும் சொன்னதால் ஜீப்பை மெதுவாய் ஓட்டினேன் அமைதியான வந்ததின் இடையில் செல்லும் சாலை நிலவு ஒளியில் மின்னும் ஓடைகள் என மெதுவாய் கடந்தேன் மஊன்றாவது ஊசி வளைவில் திரும்பும் போது கவனித்தேன் சாலை ஓரத்தில் இருந்த பாறை மீது கால்களை விரித்து படுயத்து உறங்கும் புலியை கண்டேன் ஜீப்பின் இரைச்சலில் டக் என எழுந்த அது சுமார் நுறு அடி தஊரத்தில் என்னையும் ஜீப்பையும் கண்களில் அனல் பறக்க வெறித்தது என்கைகள் நடுங்கின ஜீப் நிலைதடுமாற மலிசரிவு என்பதால் நான் சுதாரித்து ஜீப்பை நிறுத்தினேன் என்ஜினை அணைத்தேன் முன் விளக்கை எரியவிட்டேன் அப்பப்பா கண்கொள்ளா காட்சி எழுந்து நின்ற அது வாயை அகலமாய் திறந்து பெரிய கொட்டாவி விட்டபடிஈ என்னை கேவலமாய் பார்த்தது அந்த சில நிமிடங்களில் அந்த கம்பீரமான் மிருகத்தின் அழகினை ரசித்தேன் சில நிமிடங்கள் என் இதயம் துடிப்பை நிறுத்துவது போல் உறுமியது நாளை எனக்கு உண்டா என்ற சந்தேகத்தில் இறைவனை நினைத்தேன் அடுத்த நொடியில் மிண்டும் உறுமியபடியே குதித்து தாவி சாலையை கடந்து நிலவு ஒளியில் அடர்ந்த காட்டின் உள ஓடி மறைந்தது எனக்கு நினைவு வர சில நிமிடம் ஆனது என்னை போல் வளைவின் மறு புறம் காத்திருந்த ஒரு கேரளா அரசு வாகனமும் இந்த இடத்தை கடந்தது இருவரும் கைகாட்டி புலியை பார்த்தது பற்றி பேசியபடி கடந்தோம் அதுதான் முதன் முதலில் ஒரு புலியை அடர்ந்த காட்டின் உள நேரிடையாக பார்த்த அனுபவம் அதன் பின் இது போல் அடிக்கடி புலியாரை பார்க்க நேர்ந்தது புலிகள் பற்றி அதிகம் படித்தீன் ஜிம் கார்பெட் எழுதிய புத்தகம் இன்னும் பல படித்தேன் ஆர்வம் அதிகரித்தது
அடுத்த பகுதியில்
அதன் பின் வெகுகாலம் புலியார் என் கண்ணில்படவில்லை எனது கட்டுபாட்டில் அரசுக்கு சொந்தமான் படகுகள் இருந்தன படகு பராமரிப்பு இயக்கம் எனது பிரிவில் இருந்தது புதிய படகு -கண்ணகி - வந்து சில வருடமே ஆனதால் தனி பராமரிப்பு பணிக்கு பின் சோதனை ஓட்டம் செய்தோம் மாலை ஆறு மணிக்கு பெரியாறு அணைக்கு சென்று திரும்பினோம் வழியில் படகின் ஓட்டுனர் திடீரென படகின் வேகத்தை குறைத்து நிறுத்தினார் என்ன என்று கேட்டேன் அமைதியாய் பாருங்கள் என்றார் சரியாக நுறு அடி தஊரத்தில் மறுகரையின் இருந்த மான் களை நோக்கி புலி ஒன்று நீந்தியதை கண்டேன் சுமார் நுறு அடி ஆழம் இருக்கு நீரில் கம்பீரமாய் நீந்தி சென்று மான்களை வேட்டை ஆடியதை கண்டேன் சில நிமிடங்களில் தான் கொன்ற மானை இழுத்தபடிஈ புதரில் மறைந்தது அந்த புலி
அப்போது தேக்கடியில் வன அலுவலராக இருந்தவர் பல சரணாலயத்தில் பணியாற்றிய அனுபவம் மிக்கவர் அவருடன் நட்பு கிடைத்தது நிறைய விசயங்கள் அவரிடம் இருந்து அறிந்தேன்
புலிகளின் வாழ்க்கை முறை அவை எல்லைகளை குறிக்கும் விதம் என பல கற்றேன்